யாழில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டி!

யாழ் சென்றோக்ஸ் விளையாட்டு கழகத்தின் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி

யாழ் குருநகர் சென்றோக்ஸ் விளையாட்டு கழகம், யாழ் லீக் அனுசரணையுடன் நடத்தும் அமரர் மாணிக்கம் அருளானந்தம் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சென்றோக்ஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

யாழ் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்குபெற முடியும்.

குறித்த போட்டியைப் பார்வையாளர்கள் இலவசமாகப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன், வெற்றி பெறும் கழகங்களுக்குப் பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட உள்ளன.

Related Posts