Ad Widget

யாழில் முதல் முறையாக மோட்டார் பந்தய நிகழ்வு!

bike - raceயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார் பந்தைய நிகழ்வினை மோட்டார் பந்தய அமைப்பு, ஆசிய மோட்டார் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகம் நடாத்துவதுடன் யாழ்ப்பாணத்தில் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் செய்கிறது.

இந்த நிகழ்வுகளில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் மோட்டார் பந்தயம் ஆகிய பிரிவுகளாக இடம்பெறவுள்ளதுடன் துவிச்சக்கர வண்டி ஓட்டத்தில் பங்கு பற்ற விரும்பும், ஆண் பெண் எதிர்வரும் (10.09.2013) திகதிக்கு முன்னரும் மரதன் ஓட்டங்களில் பங்குபற்ற விரும்பும் ஆண் பெண் வீரர்கள் தமது விண்ணப்பங்களினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் யாழ் சிவில் காரியாலயத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூரணப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக போட்டிகளில் பங்குபற்றும் விண்ணப்பதாரிகள் 16 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதுடன் தனது மருத்துவச் சான்றிதழினை ஒப்படைத்தால் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

முதல் நிகழ்வாக பெண்களுக்கான 15 கிலோ மீற்றரும் ஆண்களுக்கு 22 கிலோமீற்றர் மரதன் ஓட்டமும் நடைபெறுகின்றது. 35 கிலோ மீற்றறை கொண்ட பெண்களுக்கான சைக்கிள் ஓட்டமும் ஆண்களுக்கான 110 கிலோமீற்றர் சைக்கிள் ஓட்டமும் 200 கிலோ மீற்றர் மோட்டார் பந்தயம் என வெவ்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெறும் முதல் 5போட்டியாளர்களுக்கு பணப்பரிசும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் தொடர்ந்து 10 இடங்களை பெறுபவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளதுடன் 14 ஆம் மற்றும் 15 திகதிகளில் இரவு யாழ் மாநகரசபை திடலில் அக்கினி இசைக்குழுவின் இசைக்கச்சேரியும் நடைபெறவுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 512ஆம் படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேவல, 51ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அபயநாயக்க, கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகத்தின் தலைவர் டினேஸ் ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts