Ad Widget

யாழில் முதல்முறையாக உலக நடன தினம் அனுஷ்டிப்பு

இனங்களுக்கிடையில் நட்புறவையும் மதங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த கலை கலாசாரத்தின் மூலமாக உழைப்போம் என கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

dance-day-1

இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலக நடன தின அனுஷ்டிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

dance-day-2

அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் வைபவங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறுகின்ற போது இலங்கையின் தென்பகுதியிலிருந்தே நடனக்குழுக்களும் நர்த்தனக்குழுக்களும் அனுப்பப்படுகின்றன. வடபகுதியிலிருந்து இதுவரையில் அவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் வடபகுதியிலிருந்து நர்த்தன மற்றும் நடனக்குழுக்களை தெரிவு செய்து அதனை தேசிய மட்டத்தில் கொண்டு வந்து சர்வதேச மட்டத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஒரு கலாசார நிலையமென்ற ரீதியில் நிர்மாணிப்பதற்கு தான் தயாராகவிருப்பதாகவும் இப்பகுதியில் சேதமடைந்துள்ள இந்து தேவஸ்தானங்களை மத்திய கலாசார நிலையத்தின் ஊடாக புனரமைப்பதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக உலக நடனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படுவதையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

மேலும் தவில் வித்துவான் வைரமுத்து சிவராமலிங்கம், நர்த்தன வித்துவான் விமல் நயனானந்த நாட்டிய கலைஞர் கிருசாந்தி ரவிந்திரா ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி ஏக்நாயக்க தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

dance-day-3

dance-day-4

dance-day-5

dance-day-6

dance-day-7

dance-day-8

Related Posts