யாழில். பாகிஸ்தான் இராணுவத்தினர்

pakistan-armyஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகள், இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.

ஹெலிகொப்டர் மூலம் பலாலி படைத்தலைமையத்தைச் வந்தடைந்த அவர்களுக்கு பலாலி இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ். கோட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts