Ad Widget

யாழில் சு.கவின் பேரணியில் கலந்து கொண்ட வாள்வெட்டுக்குழு ரௌடிகள்: பொலிசார் கைது!

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது செய்ய முயன்றனர். ஒருவர் சிக்க, மற்றையவர் தப்பியோடி விட்டார்.

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும், இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் கவனப்படுத்தவும் நேற்று தமிழர் பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில், இதற்கு எதிராக இராணுவ பின்னணியில் நேற்று யாழ் நகரில் சிறு குழு கோசமிட்டது.

முன்னாள் வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரின் தலைமையில், மேலும் சிலர் அதில் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் பல்வேறு வழக்கு விவகாரங்கள் நிலுவையில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என இருவரை பொலிசார் மடக்கிப்பிடிக்க முயல ஒருவர் தப்பியோடினார். மற்றவர் சிக்கினார். அவர்கள் இருவரும் வாள்வெட்டுகுழு ரௌடிகள் என தேடப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த குழுவிற்கு ஆள் போதாமல் சிறுவர்களையும் அழைத்து வந்திருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக கோசமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ பின்னணியிலான இந்த போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கஜன் தரப்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

சுதந்திரக்கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இந்த குழுவுடன் இணைந்திருந்தார்.

பின்னர், மாலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

Related Posts