Ad Widget

யாழில் இணைய சேவை நிறுவன உரிமையாளர் கைது!

webstarயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் Webster  Networks  என்ற இணைய சேவை நிலையம் ஒன்றினை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் பயங்கர வாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நிறுவனத்திற்கு சென்ற ரிஐடியினர் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான சுதர்சன் இராஜரட்ணம் என்ற இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன் நிறுவனத்தில் இருந்த கணினி உள்ளிட்ட சகல உபகரணங்களும் புலனாய்வு பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.அண்மைக்காலமாக வட பகுதியில் அப்பிரிவினரால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளை பேணி வந்தனர் என தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் வைத்து கடந்த வாரம் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை அனைவருக்கும் தெரிந்தததே. அவர்கள் அந்நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என தெரியவருகின்றது. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மானிப்பாய் வீதியில் உள்ள இந்த நிறுவனத்திலேயே குறிப்பிட்ட சுவரொட்டிகள் அச்சிடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை சுவரொட்டியினை ஒட்டிய மேற்படி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேற்படி நிறுவனம் இணையத்தள வடிவமைப்பு மற்றும் கணினி பயிற்சி வகுப்புக்களையும் நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

தமிழீழம் மலரும் நோட்டீஸ் விவகாரம் இருவர் கைது

Related Posts