Ad Widget

மேலதிகமாக நிதியை ஒதுக்கவும்: வட மாகாண சபை கோரிக்கை

npc_flag-northernவட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட மாகாண சபையினால் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டினை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் கீழ் வட மாகாண சபைக்கு 17 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே வட மாகாண சபையினால் மேலதிக நிதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை திறைசேரியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என தேசிய நிதி ஆணைக்குழுவின் தலைவர் ஆரியரத்ன ஹேவகே தெரிவித்தார்.

திறைசேரியின் அங்கீகாரத்தின் பின்னரே நிதியொதுக்கீடு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts