Ad Widget

மூன்றாகப் பிளந்தது சு.க

புதிய எதிர்க்கட்சித் தலைவரொருவரின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாகப் பிளந்துள்ளது என சுட்டிக்காட்டியது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை கவலைக்குரியதாகும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பில் நேற்று மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ‘எதிர்க்கட்சி எதுவென்ற புதிய பிரச்சினையொன்று தற்போது எழுந்துள்ளது’ என்றார்.

Related Posts