Ad Widget

முல்லைத்தீவில் விவசாய அமைச்சின் பாரம்பரிய உணவு விற்பனை மையம்

முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (01.06.2016) திறந்து வைத்துள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஏழு மில்லியன் ரூபா செலவில் இந்த உணவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமம் முல்லை என்ற பெண்கள் விவசாய விரிவாக்க அமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
போசாக்குக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளை நுகரும் பழக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடனும் உள்ளுர் உற்பத்திக்கான சந்தை வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனும் இந்த விற்பனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டத்திலும் பாரம்பரிய உணவு விற்பனை மையத்தை அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04 06 07
முல்லை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன், யாசீன் ஜவாகீர், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts