Ad Widget

முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு

முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸார் குறித்த எச்சங்களை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ittavil-elumbukkudu

இதேவேளை, நேற்றும் குறித்த பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து பொலிஸாரிற்கு தகவல் வழங்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் விசாரணையினை அடுத்து எச்சங்கள் பளைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts