Ad Widget

மீனவர்களை தொந்தரவுபடுத்தும் ‘நச்சுநீர் நோய்’!

jelly-fishயாழ். குடாக்கடலில் தொழில் செய்யும் வடபகுதி மீனவர்கள் ஒரு வகை நச்சு நீர்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலைமை அண்மைக்காலத்தில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

குடாக்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் ஒரு வகை நட்சத்திர ரக மீன்களோடு தொடர்புபடும் போது சுவாச நெருக்கடி, தோல் அரிப்பு, உடல் வலி உபாதை போன்றவற்றுக்கு உள்ளாகின்றமை அவதானிக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பொது மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சிவன்சுதன் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நோய்க்கு மருத்துவர்கள் இன்னும் பெயர் வழங்கவில்லை. மீனவர்கள் அதனை ‘நச்சுநீர் நோய்’ எனக் குறிப்பிடுகின்றனராம்.

கடந்த வருடத்தில் இருந்து வாராந்தம் சராசரி எட்டுப் பேர் இந்த நோய்த் தாக்கத்துக்கு ஆளாகி சிகிச்சைக்கு வருகின்றனர். பெரும்பாலும் கொழும்புத்துறை, அரியாலை, பூநகரிப் பகுதி மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்கிறார் வைத்தியர் சிவன்சுதன்.

நாங்கள் இந்த நோயைப் பற்றி ஆராய்ந்து, பரிசோதித்து வருகின்றோம். பாதிக்கப்படுவோருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை குறித்தும் கவனித்து வருகிறோம். எனினும் இந்நோய்த் தாக்கத்துக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் வட பகுதி மீனவர்கள், இந்தப் பிரச்சினை குறித்து சிரத்தை எடுக்கும்படி மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் பி.சத்தியலிங்கத்தையும் கோரியுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

Related Posts