Ad Widget

மீனவரை காணவில்லை

Missing-peopநயினாதீவு 4ஆம் வட்டாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை (08) அதிகாலை சென்ற ஸ்ரீதரன் சுரேந்திரன் (வயது 26) என்ற 2 பிள்ளைகளின் தந்தையான மீனவரைக் காணவில்லையென யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி மீனவர் கடலுக்குச் சென்ற கட்டுமரம் நயினாதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவரைக் காணவில்லையென நயினாதீவு உபபொலிஸ் நிலையத்தில், அவரது மனைவியினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts