Ad Widget

‘மாவீரர்’ என்ற நாமத்தைச் சூட்டுவது தொடர்பில், மக்களே சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்”

“வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவது தவறல்ல. ஆனால், அவர்களுக்கு, ‘மாவீரர்’ என்ற நாமத்தைச் சூட்டுவது தொடர்பில், மக்களே சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்” என்று, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

“யுத்தத்தில் உயிரிழந்தவர்ளுக்கு பூஜைகள் செய்து, அவர்களை நினைவு கூருங்கள். அவர்களுக்கு மாவீரர் என்று பெயர் சூட்டுவது, எவ்விதத்தில் சரி என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 89ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக, எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையன்று, காலி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தில், நினைவுதின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடொன்று, கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Posts