Ad Widget

மாவிட்டபுரம் மக்களுக்கான இரண்டாம்கட்ட இந்திய வீட்டுத்திட்டம்

mahalingam_indiaதெல்லிப்பளை மாவிட்டபுரம் தெற்கு ஜே/ 232 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிய வீட்டுத்திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தமக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளைப் பயன்படுத்தி ஆரம்பகட்ட வேலைகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இவர்களிற்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வங்கி வைப்பில் பயனாளிகளின் பெயரில் இடப்படவுள்ளன.

மேலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் பயனாளிகள் பெயரில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமையால் பயனாளிகள் தமக்கான கொடுப்பனவுகளை தமக்கான வங்கிகளில் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவற்றின் உதவியோடு ஆரம்பகட்ட வேலைகளை இரண்டாம் கட்டம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மேற்கொண்டுள்ளனர் என்றார்.

இந்தியன் வீட்டுத்திட்டத்துக்கு இதுவரை 100 கோடி!- யாழ்.வந்த நாடாளுமன்ற குழு விபரிப்பு

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, வீடு கட்டித் தரும் திட்டத்துக்காக, இந்திய மத்திய அரசு, இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசு நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வு பணிகளுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1, 000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து இரண்டாம் கட்ட பணிகள் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டிருந்தது.

இந்தக்கட்டத் திட்டத்திற்காக 2013-14-ம் நிதியாண்டில் ரூ.375 கோடி செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ரூ.100 கோடி ரூபாய் பயனாளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த இரண்டாம் கட்டத்தில் பயனாளர்கள் தாங்களாகவே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும்.

இந்த வீட்டு வசதித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறப்பு குழு செயல்பட்டு வருவதுடன் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன.

இவற்றில் 39 ஆயிரம் வீடுகள் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் 4, 000 வீடுகள் கிழக்கு மாகாணத்திலும் கட்டித் தரப்படவுள்ளன.

இந்தத் தொகை கொழும்பில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. ஆகிய வங்கிகளின் கிளைகள் மூலம் சம்பந்தபட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.

Related Posts