Ad Widget

மாதகல் பகுதி மக்களுக்கு மலேரியா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மாதகல் பகுதியில் உள்ள மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இப்பகுதியிலிருந்து மலேரியா நோயாளி ஒருவர் இரத்தப்பரிசோதனை மூலம் இனங்காணப்படதை தொடர்ந்தே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வந்த மாதகலைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த மாதம் இலங்கை வந்து தனது சொந்த ஊரான மாதகலில் வசித்து வந்தார். காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் மலேரியாத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வந்துள்ள சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மலேரியா தடுப்பு ஊசி போடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Related Posts