Ad Widget

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு வணிகர் கழகத்தினால் கற்றல் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

1(75)

யாழ்.மாவட்டத்தில் வறுமை காரணமாக பாடசாலையினை விட்டு இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சிறுவர் கண்காணிப்பு அதிகாரி கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 956 இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் முகமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற போரினால் பிரதேச செயலகங்கள் செயற்பட முடியவில்லை. ஆனால் தற்போது சரிவர இயங்குவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆளணிப்பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

எனவே பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றும் தமது பகுதியில் இடைவிலகல் செய்யும் மாணவர்களை இனங்கண்டு மீண்டும் பாடசாலையில் இணைக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். இத்துடன் சமூகத்தில் கலாச்சார சீர்கேடுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றன நடைபெறாத வண்ணம் தமது பிரதேசங்களை பாதுகாப்பதற்கும் பிரதேச செயலகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts