Ad Widget

மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் அனந்திக்கு எதிராக முறைப்பாடு!

ananthy-sasikaran-tnaவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்று இரவு (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

தான் இல்லாத சமயம் தனது நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அனந்தி சோதனை செய்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறாமல் யாழ்.அரியாலை ஆனந்தன் கடை வீதியில் இயங்கி வந்த விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் கிளப் என்பன யாழ்.பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (02) முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த 5 பெண்கள் உட்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் 5 பேரும் 23 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி, மற்றும் யாழ்.உரும்பிராய் ஆகிய பகுதிகளினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் உள்ளிட்டவர்களும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் இன்று (03) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts