Ad Widget

மக்களைக் குழப்ப செயற்கைப் பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகள் – டக்ளஸ்

இங்கு ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் சிலர் காட்ட முற்படுகின்றனர். நான் அதிக காலமாக இங்குதான் தங்கியிருக்கிறேன். அப்படியேதும் பதற்றச் சூழ்நிலை இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுபோன்றே நான் சந்திக்கும் அனைத்து தரப்பினரிடமும் இங்கு பதற்ற நிலை ஏதும் இருக்கின்றதா? எனக் கேட்கும் போதெல்லாம் அப்படி என்றால்? என அவர்கள் என்னிடமே திருப்பிக் கேட்கும் நிலைதான் இங்கிருக்கிறது அதைத் தவிர பதற்ற நிலைகள் இருப்பதாக எதுவித முறைபாடுகளும் இதுவரையில் எனக்கு, எவரிடமிருந்தும் முன்வைக்கப்படவில்லை என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

hous11

இன்றைய தினம் மாலை அரியாலை கிழக்கு பகுதியில் ஷொன்மா க்ளப் தொண்டர் நிறுவனத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்ற போது, அரியாலை கிழக்கு தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பதற்றநிலை ஒன்று நிலவுமேயானால் எதையுமே எங்களால் மேற்கொள்ள இயலாத நிலையேற்படும் எமது மக்கள் இன்று வாழ்கின்ற சந்தோஷ நிலை இழக்கப்படும் யுத்தத்திற்கு பின்னரான குறுகிய கால இடைவெளிக்குள் கல்வித்துறையில் நாம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளோம். இன்று ஒரு சுதந்திரமான சூழ்நிலை தோன்றுகிறது.

இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாதவர்கள் எமது மக்களின் கஷ்டங்களில் மாத்திரமே அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் செயற்கைத் தனமான பதற்றத்தை உருவாக்க முனைகின்றனர். அவ்வாறானதொரு நிலையை தோற்றுவித்தால் தான் அவர்களால் அரசியல் செய்ய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

மாகாணசபை தொடர்பில் நாம் ஆரம்பம் முதலே கூறிவந்துள்ளோம். இன்று அது சரியானவர்களது கைகளில் கிடைக்காமல் போய் விட்டதால் குரங்கின் கையில் பூமாலையாகிவிட்டது அந்த சபையின் மூலம் எமது மக்களுக்கு எதுவுமே கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அதைக் கைப்பற்றி முடக்கி வைத்திருக்கிறார்கள்.

தங்கள் நலன்களை மாத்திரமே கருத்தில் கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்து வாழும் இவர்களை எமது மக்கள் நன்றாகவே இனங்கண்டு கொண்டுள்ளனர்.

சரியானவர்களது கரங்களுக்கு அரசியல் பலம் செல்ல வேண்டும். அல்லது, அவர்களை சரியான பக்கம் கொண்டு வர வேண்டும்.

hous09

எனவே எமது மக்கள் தங்களதும் இப்பகுதியினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு தயக்கமின்றி முன்வந்து தங்களது கருத்துக்களை ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் 2 வீடுகளை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்ததுடன் 11 வீடுகளுக்குரிய திறப்புக்களை பயனாளிகளிடம் கையளித்தார். 3 வீடுகள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி நிறுவனம் மொத்தமாக 16 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. இதற்கென அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திரிக்கா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்றைய நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் திரு. செந்தில்நாதன், பிரதேச சபை உறுப்பினர்கள் திரு.ரவீந்திரன், திரு.சிறிகணேசன், நல்லூர் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுரேந்திரநாதன், பாடசாலை அதிபர் திரு.அகிலன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் திருமதி மாலனி பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts