Ad Widget

போர் வெற்றி விழா முத்திரையை யாழில் மாகாணசபை ஊழியா்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை

Sri-Lankan-Army“தேசிய போர் வீரர்கள்’ தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனை வடக்கு மாகாண சபையின் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஒவ்வொரு ஊழியரும் கட்டாயம் இரண்டு நினைவு முத்திரைகள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்கின்றனர் ஊழியர்கள்.

நினைவு முத்திரை பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் ஒவ்வொரு ஊழியரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளது.

Related Posts