Ad Widget

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு

chicago-strikeசுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று காலை முதல் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூவரையும் மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் மாற்றவேண்டும் எனக்கோரிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தின் சங்கானை, நல்லூர், தெல்லிப்பளை ஆகிய பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றி வந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மூவருக்கு ‘காடர்’ (பணியாற்றுவதற்கான அனுமதி) இல்லாத காரணத்தினால் அவர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய பிரதேச சபைகளின் கீழ் கடமையாற்றி வந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பிராந்திய சுகாதாரப் பணிமனையில் கையெழுத்திட்டு தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைக்கு மாற்றும்படி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் 70 இற்கும் மேற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலுவலகங்களுக்கு வருகை தரும் இவர்கள் வெளிக்கள வேலைகளில் ஈடுபடாமல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

சுகாதார பரிசோதகர்கள் விடுவிக்கவும் – ஆளுநர்

Related Posts