Ad Widget

பேஸ்புக்கின் புதியவிதிகள்: கருத்து சுதந்திரப்பறிப்பா?

பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும்; எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

facebook-woman-2-1_2507268b

அதன்படி, ஆபாசமானவை, ஆபத்தை விளைவிப்பவை, தற்கொலை, கொலை போன்ற உயிர்ப்பலியை ஊக்குவிப்பவை, குற்றச்செயல் தொடர்புடையவை, துவேஷத்தை தூண்டுபவை, பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான வன்மான தாக்குதல் உள்ளிட்ட பலவிதமானவை இனிமேல் முகநூலில் அனுமதிப்படாது என்று முகநூலின் புதிய விதிகள் பட்டியலிட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் முகநூலை பாதுகாப்பான இணையத்தின் சமூகவெளியாக மாற்றும் என்றும், முகநூலின் ஆபாசத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இந்த புதிய விதிகள் அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான வலுவான கட்டமைப்புகளுக்கு எதிரான வெகுமக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் என்கிற கவலைகளும் சிலரால் வெளியிடப்படுகின்றன.

Related Posts