Ad Widget

போராளிகளை குடும்பத்துடன் பதவியா முகாமுக்கு அழைத்துச் சென்ற படையினர்!

Sri_Lanka_Army_Logoமுல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று மாலை சென்ற இராணுவத்தினர் அங்கு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைச் சந்தித்திருந்தனர்.

இதன்போது விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் தத்தமது குடும்பங்களுடன் பதவியா ஐனககபுரம் என்ற பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு கட்டாயம் வர வேண்டுமென மிரட்டும் வகையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரானுவத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசங்களுக்கு இன்று காலை பஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டு முன்னாள் போராளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் இராணுவ முகாமுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட போராளிகளும் அவர்கள் குடும்பங்களும் பெரும் பயப்பீதியுடன் இராணுவ முகாமிற்கு சென்றிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இவ்வாறு திடீரென இராணுவத்தினர் எதற்காக அழைத்துள்ளார்கள் என்று தெரியாத நிலையில் மிகவும் அச்சமடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts