Ad Widget

பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும்: ஹத்துருசிங்க

2013_05_25_012009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…

இன்றைய நாள் ஒரு புனிதமான நாள். இந்த நாளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த பசுக்களை வழங்குவதில் நான் மகிழ்சி அடைகிறேன். இந்தியாவில் இந்த நாள் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகின்றது. அதேபோன்று இலங்கையிலும் இந்த நாள் ஒரு புனித நாளாக மாற்றம் அடைந்துள்ளது.

சாதி, மதம், இன பேதங்கள் இன்றி வாழவேண்டும் என்று புத்தபெருமான் போதித்திருக்கின்றார். அந்த போதனைகளுக்கு ஏற்ப நாம் எல்லோரும் தமிழ், சிங்கள இன வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார்.

இந்த நாட்டில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறந்த ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சமாதானத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் ஒற்றுமையை உருவாக்கவேண்டும். அந்த ஒற்றுமையின் ஊடாகவே வெற்றிகொள்ளப்பட்ட சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் தேவையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்காமல் செயற்படவேண்டும்.

இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பசுக்கள் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பிள்ளைகளின் போசாக்கான வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டும் சிலர் பரப்பி வரும் பொய்யான பரப்புரைகளுக்கு மக்கள் ஒருபோதும் அஞ்சாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன் உரையாற்றும் போது, யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் அளப்பெரிய சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகின்றனர். குறிப்பாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி அவர்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று குறிப்பிட்டார்.

Related Posts