Ad Widget

புலித்தேவனின் சகோதரரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் யாழ்.மேல்நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சீவரெத்தினம் பாலதயாகரன் (புலிமாறன்) பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் இன்று திங்கட்கிழமை நிராகரித்தார். புலிகளின் சமாதன செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் சகோதரரான பாலதயாகரன், கடந்த 2009 மே 17ஆம் திகதி முள்ளிவாக்காலில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்.மேல் நீதிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவருக்கு எதிரானசான்றென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு அளித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது, சீ.பாலதயாகரன் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் மு.றெமிடியஸ், இக்குற்ற ஒப்புதல் வாக்கு மூலமானது இவரினால் விரும்பி சுதந்திரமாக அளிக்கவில்லை எனவும் குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது வேறு பொலிஸ் உத்தியோகத்தரால் இவர் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு அவரது விருப்பத்திற்கு மாறாக இவரின் கையப்பம் இடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

நீண்டநேர விசாரணைகளின் பின்பு, சீ. பாலதயாகரனிடம் பெறப்பட்ட வாக்குமூலமானது சுயேட்சையாக சுயவிருப்பத்தின் பேரில் அளிக்கப்படவில்லை எனவும் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இணங்க பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி சந்தேக நபரிடம் பெறப்பட்ட குற்ற வாக்குமூலத்தை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் நிராகரித்தார்.

Related Posts