Ad Widget

புலம்பெயர் தமிழர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்: யாழ்.ஆயர்

‘புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்’ என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போதே யாழ்.ஆயர் இவ்விதம் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றவர்களுடன் அரசு இதய சுத்தியுடன் பேசவேண்டும்.

தமிழ் மக்கள் அரசியல் தீர்வைத்தான் எதிர்பார்கிறார்கள். அவர்களது விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது.கடந்த கால யுத்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு யுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ, யாழ். மாவட்டச் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts