Ad Widget

பிஜேபி உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்

பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது.

mahintha-modi

இந்து சமுத்திர சுற்றயல் நாடுகளின் அமைப்பினால் (Indian Ocean Rim Association) மேற்கொள்ளப்படும் பணிகள், இந்தப் பணிபளுக்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் உட்பட இருதரப்பு விடயங்கள், பிரந்திய முக்கியத்துவம் சம்பந்தமான பல விடயங்களை இந்குழு கலந்துரையாடியது. இதன்போது இந்து சமுத்திரத்தைப் பாதுகாப்பதில் இல்கை ஆற்றும் முக்கிய பணியைச் சுட்டிக்காட்டினார்.

இது சம்பந்தமாக இலங்கையின் வகிபாகத்திற்கு அவர்கள் முழுமையான ஆதரவிற்கு உறுதிவழங்கினார்.

கடல்சார்ந்த கற்கைகள், சூழலியல் கற்கைகளுக்கான உயர்திறன் மையத்தினை நிறுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை ஜனாதிபதி மகிந்த இவ்வணியிடம் தெரிவித்தார்.

கலாநிதி. சுரேஷ் பிரபாகர் பிரபு, கலாநிதி செரி சேஷாத்திரி இராமானுஜன், கலாநிதி ஸ்வப்பன் தாஷ்குப்தா, பேரா.மாதவ் நலாபட் ஆகியோர் ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பில் பங்குகொண்ட ஏனைய பிஜேபி உறுப்பினர்களாவர். போரின் முடிவில் இலங்கை கொண்டுள்ள போருக்குப் பிந்தைய முன்னேற்றம் குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பயங்கரவாதத்தை உறுதியான விதத்தில் எதிகொண்ட ஒரே நாடு இலங்கை ஆகும் என கலாநிதி இராமானுஜன் தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவிற்கு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய கலாநிதி சுவாமி போரின் முடிவு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நன்மையளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு கிழக்கின் உட்கட்டமைப்பினை முன்னேற்றுவதற்கும், மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி வசதிகளைக் கொடுப்பதற்கும் இலங்கையை மும்மொழைித் தேசமாக மாற்றுவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்குவதற்கும் அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புக்களை அவர்கள் பாராட்டினார்கள்.

இரு நாட்டு தலைவர்களும் கொண்டிருக்கும் சமூக ஊடக உறவு தொடர்பாக நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்த அதேவேளை இந்தியப் பிரதமர் மோடி இல்கையுடன் மிகச்சிறப்பான உறவுகளை விரும்புவதாக பிஜேபி அணி ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவித்தது.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுனிமல் பெர்னான்டோ ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

Related Posts