Ad Widget

பாதையடைப்பு விவகாரம், கோவில் நிர்வாகத்திற்கும் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல்

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் பாதையை ஆலய நிர்வாகத்தினர் அனுமதி இன்றி தடைசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பல ஆண்டு காலமாக பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை எந்தவித முன்னறிவித்தலும் இன்றி நல்லூர் பிதேச சபையிடம் அனுமதி பெறாமல் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதேச சபை தலைவரின் உத்தரவுக்கமைய பிரதேச சபை ஊழியர்களால் குறித்த வீதித்தடைகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட போது ஆலய நிர்வாகித்தினருக்கும் பிரதேச சபை ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் ஏற்றப்பட்ட பொருட்கள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டதுடன் பிரதேச சபை தலைவருக்கெதிராக கோசங்களை எழுப்பி எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரால் சம்பவ இடத்தில் இருந்து பிரதேச சபை உழவு இயந்திரம் வெளியேற்றப்பட்டதுடன்,ஆலய நிர்வாகத்தினரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை நீடிப்பதால் யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

பாதை மூடியமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts