Ad Widget

பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்!

Phoneபண்ணை தனியார் பஸ் நிலையத்தில் இராணுவச் சிப்பாயால் தாக்கப்பட்ட பஸ் உரிமையாளரைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொள்ளும் இனந்தெரியாதோர் அந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது.

புத்தாண்டுக்கு முதல்நாள், பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தில் வைத்து, இராணுவச் சிப்பாய் ஒருவர் பஸ் உரிமையாளரைத் தாக்கியிருந்தார்.

அதனையடுத்து தாக்கப்பட்ட பஸ் உரிமையாளரால் குறித்த இராணுவச் சிப்பாய்க்கு எதிராக யாழ். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அது குறித்து இராணுவப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்றும் சி.ஜ.டி என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இனந்தெரியாத நபர்கள், முறைப்பாடு செய்தவர்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாட்டை மீளப்பெறுமாறு அச்சுறுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இராணுவப் பொலிஸார் என்று தம்மை அறிமுகப்படுத்திய சிவில் உடையில் சென்ற இருவர், தாக்கப்பட்ட பஸ் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது தமிழிலும் சிங்களத்திலும் தனித்தனியாக எழுதப்பட்ட முறைப்பாட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 30 இடங்களில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. சிங்களத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியாமலேயே தான் கையெழுத்திட்டுள்தாக பஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் – யாழ்.நகாில் பரபரப்பு

Related Posts