Ad Widget

பழங்களும் நோய்களும்

“வாயைக் கட்டிக் கிடக்­கி­றாளே. ரம்­புட்டான் ரம்­புட்­டா­னாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அணுங்கிக் கொண்­டி­ருக்­கிறாள்.” திட்டித் தீர்த்தார் தந்தை. வேலைக்கு போகாமல் பிள்­ளையை மருத்­து­வ­ மனைக்குக் கூட்டித் திரிய வேண்டிக் கிடக்­கி­றதே என்ற சின­மாக இருக்­கலாம்.

fruits

இவர் மட்­டு­மல்ல, இன்­னமும் பலர் தங்கள் பிள்­ளைகள் ரம்­புட்டான் பழம் சாப்­பிட்­ட­தால்தான் காய்ச்சல் வந்­தது என அவர்­களில் குற்றம் கண்­டார்கள்.

மே, ஜுன், ஜூலை மாதங்கள் பொது­வாக ரம்­புட்­டான் சீச­னாக இருக்கும். மல்­வான ரம்­புட்டான் மிகவும் பிர­சித்­த­மா­னது. களனிப் பள்­ளத்­தாக்குப் பிர­தே­சத்­திலேயே பெரு­ம­ளவு ரம்­புட்டான் உற்­பத்­தி­யா­கின்­றது. இருந்­தாலும் பிபில, மொன­ரா­கலை பகு­தி­யி­லி­ருந்து தை மாசி மாதங்­களில் குறைந்­த­ளவு ரம்­புட்டான் பழங்கள் வரு­வ­துண்டு.

சீசன் காலத்தில் வீதி ஓர­மெல்லாம் தற்­கா­லிக கடைகள், லொறிகள் இவற்றில் எல்லாம் மதா­ளித்த சிவத்த கம்­பளிப் பூச்­சிகள் போலப் பழங்கள் குவிந்து கிடக்கும். வழ­மை­யான பழக்­க­டை­க­ளிலும் கூடை நிறைய வைத்­தி­ருப்­பார்கள். பிள்­ளைகள் மட்­டு­மல்ல பெரி­ய­வர்­களும் ரம்­புட்டான் அமுக்­கு­வதில் பின்­நிற்­ப­தில்லை. இவ்­வாறு ரம்­புட்டான் சாப்­பிட்­ட­வர்­களில் சிலர் காய்ச்­ச­லுடன் வரு­கி­றார்கள். “ரம்­புட்டான் காய்ச்சல்” என்று தாங்­க­ளா­கவே நாமம் சூட்­டி­வி­டு­கி­றார்கள். அதே வேளை ரம்­புட்டான் சாப்­பி­டாத பலரும் இப் பருவ காலத்தில் காய்ச்­ச­லுடன் வரு­கி­றார்கள்.

காய்ச்சல் என்­பது தனி ஒரு நோயல்ல என்­பதை நீங்கள் எல்­லோரும் அறி­வீர்கள். தடிமன், காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மலே­ரியாக் காய்ச்சல், தைபொயிட் காய்ச்சல் எனப் பல­வகை இருக்­கின்­றன. இவை யாவம் கிரு­மிகள் தொற்­று­வ­தா­லேயே வரு­கி­றது.

ரம்­புட்டான் சாப்­பி­டு­வதால் எவ்­வித காய்ச்­சலும் வரு­வ­தில்லை. ஆனால் இது பர­வ­லாகக் கிடைக்கும் காலங்­க­ளான ஜுன், ஜூலை மாதங்­களில் பெரும்­பாலும் தென்­னி­லங்­கையில் மழை பெய்­வ­துண்டு. வெயி­லுடன் மழையும் மாறி மாறி வரும் இம் மாதங்­களில் டெங்கு முதல் சாதா­ரண காய்ச்­சல்கள் எனப் பல்­வேறு தொற்று நோய்கள் பர­வு­கின்­றன நுளம்பு கடிப்­பதால் டெங்குக் காய்ச்சல், மலே­ரியா போன்­றவை வரு­கி­ன்றன. எலி­களின் எச்­சங்­களால் எலிக்­காய்ச்சல் பர­வு­கி­றது. நோயுள்­ளவர் தும்­மு­வ­தாலும் இரு­மு­வ­தாலும் தொற்­று­கி­றது பன்றிக் காய்ச்சல்.

நெல்­லிக்காய், மங்­குஸ்தான், மாம்­பழம், கொய்­யாப்­பழம் போன்ற எந்தப் பழத்தை வாங்­கி­னாலும் அவற்றை உண்ண முன்னர் நன்கு கழு­விய பின்­னரே உண்ண வேண்டும் என்­பது தெரிந்­ததே. பழத்தின் உட்­புறம் கிரு­மிகள் தீண்­டாது சுத்­த­மாக இருக்கும் என்ற போதிலும் அவற்றின் தோலா­னது பல­வித அழுக்­கு­க­ளாலும் கிரு­மி­க­ளாலும் மாச­டைந்­தி­ருக்கக் கூடும்.

ஏனெனில் பழங்­களை பிடுங்கி நிலத்தில் போட்­டி­ருப்­பார்கள். நிலத்தில் நாய், பூனை போன்ற பிரா­ணி­களின் மலம், குரு­வி­களின் எச்சம், மனி­தர்­களின் கழி­வுகள் போன்ற பல­வற்­றி­லி­ருந்த கிரு­மிகள் பழத்தின் தோலை மாசு­ப­டுத்­தி­யி­ருக்கும். பழங்­களை பறித்த இடங்­க­ளி­லி­ருந்து விற்­பனை செய்யும் இடத்திற்கு கொண்­டு­வரப் பயன்­ப­டுத்தும் பைகள் சாக்கு போன்­ற­வற்றில் இருந்தும் கிரு­மிகள் பர­வி­யி­ருக்கும். அதே­போல தெரு­வோரம் வைத்து விற்­கும்­போதும் காற்­றி­லி­ருந்தும் பழங்­களைக் கையாளும் மனி­தர்­களின் கரங்­க­ளி­லி­ருந்தும் பல­வி­த­மான கிரு­மிகள் அவற்றின் தோலில் படிந்­தி­ருக்க வாய்ப்­புண்டு.

என­வேதான் ரம்­புட்டான் முதல் வேறு எந்தப் பழத்தை வாங்­கி­னாலும் சாப்­பிட முன்னர் நன்கு கழு­வ­வேண்டும். இரண்டு தட­வை­க­ளா­வது கழுவ வேண்டும். அல்­லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழு­விய பின்­னரும் கூட ரம்­புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.

கத்­தி­யினால் தோலை வெட்டி அகற்­றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்­னர் பழத்தை எடுத்து உண்­ணுங்கள். சுத்­தப்­ப­டுத்­திய பழங்­களைச் சாப்­பி­டு­வதால் நோய்கள் எதுவும் தொற்­றாது. உள்­ளி­ருக்கும் சுளைகள் சுத்­த­மா­னவை.

ரம்­புட்டான் இலங்­கையில் பிர­பல்­ய­மாக இருந்­தாலும் இதன் பூர்­வீகம் இந்­தோ­னேஷியா என அறி­யப்­ப­டு­கி­றது. இது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழ­மாகும். ஆயினும், பழத்தின் சாப்­பிடக் கூடிய பகு­தியின் 100 கிரா­மி­லி­ருந்து 64 கிலோ கலோ­ரி­ய­ளவு சக்தி கிடைக்கும். அதே­வேளை புரதம் 1 கிராம் உள்­ளது. கொழுப்பு மிகக் குறை­வாக 0.1 கிராம் மட்­டுமே உள்­ளது. கல்­சியம், பொஸ்­பரஸ் போன்ற கனி­மங்­களும், ரைபோ­பி­ளேவின், தயமின், விற்­றமின் சீ போன்­ற­வையும் நிறையக் கிடைக்­கின்­றன.

இதன் கார­ண­மாக இந்­தோ­னேஷியா. மலேசியா போன்ற நாடு­களில் நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்­க­ளுக்­கான வீட்டு மருத்­து­வ­மாக உப­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது. காய்ச்­ச­லுக்கு மருந்­தாக இதன் பட்­டை­களை உப­யோ­கிப்­ப­தா­கவும் தெரி­கி­றது.

ரம்­புட்­டானால் காய்ச்சல் வரு­கி­றது என நம்­ம­வர்கள் சொல்ல காய்ச்­ச­லுக்கு மருந்­தாக அதே ரம்­புட்­டானை வேறு நாடு­களில் பயன்­ப­டுத்­து­வது சுவாரஷ்யமான தக­வ­லா­கப்­ப­டு­கி­றது. இருந்­த­போதும் இதனால் காய்ச்சல் வரு­கி­றது என்­பது தவ­றான கருத்து என்றே சொல்ல வேண்டும்.

ரம்­புட்டான் பற்றி மட்­டு­மல்ல வேறு பழங்கள் பற்­றியும் எமது சமூ­கத்­தி­ன­ரி­டையே பல தவ­றான எண்­ணங்கள் இருக்­கவே செய்­கின்­றன. அவை பற்­றிய விழிப்­பு­ணர்வு தேவை.

“முழுகிப் போட்டு மாம்­பழம் சாப்­பிட்டன் தொண்டை கட்டி சளி­யோடை காய்ச்சல் வந்­து­விட்­டது” எனத் தன்­னைத்­தானே நொந்து கொண்டாள் அரச நிறு­வனம் ஒன்றில் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்றும் ஒரு பெண்­மணி. “நானும்தான் முழு மாம்­பழம் சாப்­பிட்­டனான். எனக்கு ஒண்டும் இல்­லை­தானே” என்றார் கணவன். மற்­றவர் முன்­னா­லா­வது தனது வீரத்தைக் காட்­டிய பெருமை முகத்தில் படர்ந்­தது.

“இந்தச் சளித் தொல்­லை­யோடை நாளாந்தம் அல்­லா­டுறன். வாழைப்­ப­ழத்தை தொடு­றதே இல்லை” என்றார் இன்­னொரு பெரி­யவர்.

“தயங்­காமல் வாழைப்­பழம் தினமும் சாப்­பிடுங்கோ. இவ்­வ­ளவு நாளும் வாழைப்­ப­ழத்தை கைவிட்டும் சளித்­தொல்லை தீர­வில்லை என்றால், உங்­கடை சளிக்கு வாழைப்­பழம் காரணம் இல்லை என்­று­தானே அர்த்தம்” என்றேன் நான்.

சிறிது காலத்­திற்கு முன்னர் Imperial College of Londonஇல் செய்­யப்­பட்ட ஒரு ஆய்­வா­னது தினமும் ஒரு வாழைப்­பழம் சாப்­பிடும் குழந்­தை­க­ளுக்கு ஆஸ்த்துமா நோய் வரு­வ­தற்­கான சாத்­தியம் சாப்­பி­டா­த­வர்­களை விட 34% குறைவு என்­கி­றது. எனவே சளித்­தொல்­லைக்குக் காரணம் வாழைப்­பழம் அல்ல என்­பது தெளி­வா­கி­றது.

அதே­போல பிரஷர் வராமல் தடுப்­ப­தற்கும் அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் வாழைப்­ப­ழத்தில் உள்ள கனி­ம­மான பொட்­டா­சியம் உதவும். இதற்கு எதிர்­மா­றாக கறி உப்பில் உள்ள சோடியம் சத்து பிர­ஷரை உயர்த்தும் என்­பது பர­வ­லாகத் தெரிந்த விட­யமே. அத்­துடன் குரு­தியில் பொட்­டா­சியம் அதி­க­ளவில் இருப்­ப­தா­னது பல்­வேறு நோய்­களால் ஒருவர் மர­ணிக்கக் கூடிய சாத்­தி­யத்தை 20 வீதத்தால் குறைக்­கி­றது என்­கி­றது மற்­றொரு ஆய்வு.

வாழைப்­பழம் பற்­றிய தவ­றான கருத்­து­களை உதறி ஒதுக்க வேண்டும். அது மிகச் சிறந்த பழங்­களில் ஒன்று என்­ப­தால்தான் உலகில் ஆகக் குறைந்­தது 107 நாடு­களில் பயி­ரிடப்­ப­டு­கி­றது. பல­ராலும் விரும்பி உண்­ணப்­ப­டு­கி­றது.

மாம்­ப­ழத்தில் 20ற்கு மேற்­பட்ட விற்ற­மின்­களும் தாதுப் பொருட்­களும் உண்டு. அதி­லுள்ள ஒட்­சி­ச­னெ­திரி ஆனது கண்­க­ளுக்கு ஊறு விளை­விக்கக் கூடிய நீல ஒளிக் கதிர்­களை வடித்­தெ­டுப்­பதன் மூலம் மக்கியுலர் டிஜெனரேசன் Macular degen eration என்ற கண்பார்வை இழப்பு நோயைத் தடுக்கும் எனக் கூறுகிறார்கள்.

அத்துடன் மாம்பழத்தில் உள்ள பீற்றா கரோடின் என்ற பொருளானது சளி ஆஸ்துமா போன்­ற­வற்றை தடுக்கும் ஆற்றல் கொண்­டது. பப்­பாளி, பூசணி, புரொ­கோலி, கரட் போன்­ற­ வற்­றிலும் இது நிறைய உண்டு. அத்­துடன் புரஸ்ரேட் புற்று நோய், பெருங் குடல் புற்று நோய் போன்­ற­வற்­றையும் தடுக்கும்.

இவ்­வாறு ஒவ்­வொரு வகைப் பழங்­க­ளிலும் பல போஷனைப் பொருட்கள் உண்டு. அவை பல நோய்­களைத் தடுக்கும் ஆற்­றல்கள் கொண்­டவை. ஆயினும் அவற்றை விப­ரிக்க கட்­டு­ரையின் நீளம் இடம் தராது. ஒவ்­வொரு வேளை உண­வு­டனும் ஏதா­வது ஒரு பழத்­தை­யா­வது உண்­ணுங்கள். நோயற்ற வாழ்வு வாழ அது கை கொடுக்கும்.

 

ஏனைய கட்டுரைகளுக்கு

Related Posts