Ad Widget

பலாலியில் இருந்து முதல் விமானம் அடுத்தமாதம் இந்தியாவுக்கு புறப்படும்!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முதல்கட்டமாக ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வதகவும் இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.

முதலாவதாக இந்தியாவுக்கான விமான சேவை அடுத்த மாதம் (ஓகஸ்ட் மாதம்) தனது பயணத்தை மேற்கொள்ளும். இதற்கு உரிய விதத்தில் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.

Related Posts