பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கப்பட்டோருக்கு மாதந்தம் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!!!

பட்டதாரி பயிலுனர்களாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டவர்களுக்கு மாதந்தம் 20 ஆயிரம் ரூபாயை வைப்பிலிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் முகமான மக்களுக்கு பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதில் ஒரு அங்கமாகவே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் மார்ச் 2ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பதவியேற்கவில்லை என்ற காரணத்தால் தேர்தல் ஆணைக்குழுவால் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டவர்களுக்கு மாதந்தம் 20 ஆயிரம் ரூபாயை வைப்பிலிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts