தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன் னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 557 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 2 ஆவது இன்னிங்சை ஆடிய பங்காளதேஷ் 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களை எடுத்து இருந்தது. அந்த அணி இன்னும் 57 ஓட்டங்களை பின்தங்கி இருக்கிறது.
நேற்று (18) இடம்பெற்ற ஆட்டத்தில் பங்காளதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 8 பேரை அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார். 6 கேட்ச் பிடித்தார். 2 வீரர்களை ஸ்டம்பிங் செய்தார்.
இதற்கு முன்பு விக்கெட் கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் 7 பேர் அவுட் ஆக காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. இதை லிட்டன் தாஸ் முறியடித்தார்.
வாசிம் பாரி (பாகிஸ்தான்), பாப் டெய்லர் (இங்கிலாந்து), இயன் சுமித் (நியூசிலாந்து), ரிட்லே ஜேக்கப், ஜோசுவா சில்வா (மேற்கிந்திய தீவுகள்) ஆகியோரின் சாதனை முறியடிக்கப்பட்டது. இவர்கள் 7 வீரர்கள் அவுட் ஆக காரணமாக இருந்தனர். இவர்கள் அனைவருமே 7 கேட்ச் பிடித்து இருந்தனர்.