நேரசூசியை தவறாக பயன்படுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

நேரசூசியை பின்பற்றாது செயற்படும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துச் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். புன்னாலைக்கட்டுவான் வழித்தடத்தில் தனியார் பேரூந்துச் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலையிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பில் அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நேரசூசியை தவறாகப் பயன்படுத்தி தனியார் மற்றும் இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதால், இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் நேரசூசியை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தவறுகள் கண்டுபிடிக்கப்படின், தனியார் மற்றும் இ.போ.ச. பேரூந்துச் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மேலும், நேரசூசியை உரிய முறையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவையை சரியாகவும் நியாயமாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு எதிராக தனியார் பேருந்துக்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts