நீர்வேலியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (10.04.2014) நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்.

organic-farm (1)

யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயத்தில் அதிக அளவில் விவசாய உரங்களும், பூச்சிகொல்லிகளும் பெருமளவு நீரும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் விவசாய இரசாயனங்களால் மாசடைந்து வருவதோடு நிலத்தடிநீரின் அளவும் குறைந்து வருகிறது. மேலும், விவசாய இரசாயனங்கள் உணவுடன் உடலைச் சென்றடைவதால் மனிதர்களின் தேகஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தைக் காப்பாற்றுவதோடு ஆரோக்கியமான வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தாத, இயற்கை விவசாயமான சேதன விவசாயத்துக்கு நாம் திரும்புவது அவசியமாகும்.

organic-farm (2)

இதனடிப்படையிலேயே அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (SOND) என்னும் அரசசார்பற்ற நிறுவனம் சேதன விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.

இந்நிறுவனம் நீர்வேலியில் அமைத்திருக்கும் மாதிரி சேதன விவசாயப் பண்ணையையே வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் திறந்துவைத்துள்ளார். இம்மாதிரிப் பண்ணையைத் தொடர்ந்து விரைவில் வல்லையில் பத்து ஏக்கர் அளவில் சேதன முறையிலான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சொண்ட் நிறுவனத்தின் தலைவர் ச. செந்துராஜா தெரிவித்துள்ளார

Related Posts