Ad Widget

நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, முன்னதாக இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது.

New Zealand v Sri Lanka

இதில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து, இந்த வெற்றியுடன் நடைபெற்று முடிந்துள்ள ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மூன்றில் வெற்றி பெற்று 3-1 என முன்னிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து சார்பில் லூக் ரொஞ்சி 170 ஓட்டங்களையும் கிராண்ட் எலியட் 104 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது விளாசினர். இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அணி 360 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் இணைப்பிரியாத 267 ஓட்டங்களை பெற்று லுக் ரொஞ்சி மற்றும் கிராண்ட் எலியட் ஆகியோர் உலக சாதனை ஒன்றையும் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

361 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களையே பெற்று 108 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் தனித்து நின்று போராடிய டில்ஷான் 116 ஓட்டங்களையும் இன்றைய போட்டியில் அணித்தலைவராக களமிறங்கிய திரிமான்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 45 ஓட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக உலக சாதணை இணைப்பாட்டத்தை மேற்கொண்ட லுக் ரொஞ்சி மற்றும் எலியட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Posts