Ad Widget

நியதிச்சட்டங்கள் தொடர்பான கூட்டம் ஒத்திவைப்பு

CVK-Sivaganamவடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள் தொடர்பில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் சிபாரிசு பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட மூன்று நியதிச் சட்டங்களான நிதி நியதிச்சட்டம், முத்திரை கைமாற்றல் சட்டம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் நியதிச்சட்டம் ஆகியவற்றுக்கு, ஆளுநரின் சிபாரிசு பெறும் பொருட்டு வடமாகாணச் செயலாளர் அலுவலகம் ஊடாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருந்தும் குறித்த நியதிச்சட்டங்களை ஆளுநரின் சிபாரிசுக்காக கடந்த திங்கட்கிழமையே (09) வடமாகாணச் செயலாளர் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பார்வையிட்டு சிபாரிசு செய்வதற்கான கால அவகாசம் வேண்டும் என ஆளுநரினால், அவைத் தலைவரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த நியதிச்சட்டம் தொடர்பாக கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (11) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என அவைத்தலைவர் மேலும் கூறினார்.

Related Posts