Ad Widget

நாட்டை முடக்குவதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசு நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு – சுகாதார அமைச்சர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

மாதாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு மேலதிகமாக, நாட்டில் தினசரி வருமானம் உள்ளவர்களும் உள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

கடைகளை மூடுவதற்கும் சில நகரங்களை தனிமைப்படுத்துவதற்கும் மக்களின் எடுத்துள்ள முடிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க உரிமை உண்டு என்று கூறினார்.

Related Posts