Ad Widget

நாட்டை காக்கும் நீலப்படையணி யாழில் உருவானது

நாட்டை காக்கும் நீலப்படையணி’ என்னும் தொனிப் பொருளில் ஆளும் கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் ஓர் கட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 30ம் திகதி யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லுரியில் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

 

a

இந்தக் கூட்டத்தில் நாட்டை காக்கும் நீலப்படையணியின் கிளிநொச்சி முல்லைத்திவு மாவட்ட பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

நீலப்படையணியின் செயற்றிட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களுடன்
இளைஞர் சேவைகள் மன்ற உதவி அதிகாரி வன்னியசிங்கம் கபிலன் அவர்கள் குறிப்பிடும் போது…..

இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மிகச்சிறப்பான வழியில் வழிநடத்தி செல்லும் மாண்புமிகு ஜானதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்நாட்டின் சிறப்பான ஜனாதிபதி ஆவார். இந் நாட்டை சிறப்பான அபிவிருத்தியின் பாதையில் வழிநடத்தி செல்கின்றார். தற்போது ஜானதிபதி தேர்தல் இடம்பெற உள்ளது.

 

c

இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளையும் சாவல்களையும் முன்னெடுக்கின்றன. இதில் தற்போது கட்சி தாவி பாய்ந்துள்ள மைத்திரிசிறிபாலவும் ஒருவர். இவரை எத்தனை பேருக்கு தெரியும். இவர் மக்களுக்காக என்ன செய்தார். குறிப்பாக தமிழ் மக்களுக்காக ஒரு நாளாவது குரல் கொடுத்தரா? யோசிக்க வேண்டிய தருணங்கள் இவை. தற்போது ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசை சாடி வருகின்றார். மக்களுக்காக நல்வேறு செயற்றிட்டகளை முன்னெடுத்து செல்லும் இந்த அரசாங்கம் தேவையா? அல்லது மக்கள் மீது எந்த அக்கறையுமற்று வெறும் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கும் மைத்திரிபால சிறிபால தேவையா?
எமது மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் எமது யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மக்களுக்காக சேவையாற்றி வருபவர்கள் மக்கள் பணங்களை சுரண்டுபவர்கள் அல்ல. அனால் கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

போர் அனர்த்தங்களுக்கு உள்ளாகி இடம்பெயர்ந்து வீடுகளையும் தொழில் துறைகளையும் இழந்து அல்லல் பட்டிருக்கும் எம் மக்கள் மீது எமது பிரதேச தமிழத்தேசியம் பேசும் சுயநல அரசியல் நோக்கங்களுடனான அநீதியானதும் அர்த்தமற்றதுமான பேச்சுக்களை பேசிவரும் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் ஒரு நிமிடம் யோசியுங்கள் ஆனால் வெறும் வெட்டி பேச்சுக்கள் மட்டும் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் தன்னாலும் செயலால் செய்து காட்ட முடியும் என நிருபீத்து காட்டியவர் அங்கஜன் இராமநாதன் இவர் பேச மாட்டார் ஆனால் செய்து முடிப்பார். பொதுவாக அரசியல்வரிகள் அதிகம் பேசுவார்கள் மக்களுக்கு ஏதுகுமே செய்ய மாட்டார்கள் என்று கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இவற்றை மாற்றி காட்டியவர் அங்கஜன் இராமநாதன். அவரது செயற்றிட்டங்கள் இன்னும் வலுப்பெற வேண்டும் என்றால் நாம் அனைவரும் அங்கஜன் இராமநாதன் பின் நிற்க வேண்டும். அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும். எமது மக்கள் இவரது கரங்களை வலுப்படுத்தினால் அவர் ஜனாதிபதியிடம் உரிமையுடன் எமது மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க முடியும். ஆகவே நாம் எமது யாழ் மாவட்ட அங்கஜன் இராமநாதன் பின் நிற்போம் வரும் தேர்தலில் மாண்புமிகு ஜானதிபதியை ஆதரித்து எமது நாட்டை அபிவிருத்தி நோக்கி வழி நடத்தி செல்வோம்.

அதி மேன்மையான மக்களளே இந்த அரசிற்கு அபகீர்த்தியை கொண்டு வரும் இனங்களுக்கிடையே பிரிவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி சகவாழ்வுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இதனை தற்போது ஜக்கிய தேசிய கட்சி செய்து வருகின்றது. இவர்களது கடந்த காலச் செயற்பாடுகளை உற்று கவனித்தால் அறிந்து கொள்ளலாம். எமது இந்த நீலப்படையணியானது பிரதேச ரீதியாக மக்களிடம் செல்ல உள்ளது. அதன் முலம் மக்களை இலகுவாக அடையவுள்ளோம். இச் செயலணி முலம் மக்களிடையே அபிவருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதுடன் சிரமதானம் விழிப்புணர்வு போன்ற வேலைத்திட்டங்களை செய்ய உள்ளோம் இதற்கு அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம் எனக் கூறி முடித்தார்.

நாட்டை காக்கும் நீலப்படையணியின் இளைஞர் அமைப்பு கிளிநொச்சி முல்லைத்திவு மாவட்ட பிரதேச அமைப்பாளர் காசுன் பெரேரா தெரிவிக்கும் போது

நாட்டை வளப்படுத்துவதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழு முயற்சியுடன் செயற்படுகிறது எனத் தெரிவித்த காசுன் பெரேரா நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிராக இளைஞர்களும், யுவதிகளும் அணி திரளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்று நமது நாட்டை அபிவிருத்தி செய்கின்ற ஒரு கட்சியை மக்கள் சரியாக தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு பிழையாக இருந்தால் நமது நாட்டில் முன் இருந்த பயங்கவாதம் தலைதூக்கி விடும்.

கடந்த 80, 90களில் நமது நாட்டில் தலைதூக்கியிருந்த பயங்கரவாத நடவடிக்கையினால் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு பொதுமக்கள் குண்டுத்தாக்குதலினால் கொல்லப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கையில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேர்கர் என்று இல்லாமல் அனைவரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தனர்.

எனவே, அப்படியாதொரு சூழ்நிலை இனியும் உருவாகக் கூடாது என்பதுதான் எமது கோரிக்கையாகும். எனவேதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலுள்ள ‘நீலப்படையணி’ யை வலுப்படுத்துகின்ற நோக்கில் இளைஞர், யுவதிகளாகிய உங்களைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் தெரிவு செய்கின்ற பாதை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இப்படையணி முலம் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி சிரமதானம் விழிப்புணர் செயற்றிட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளோம் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் வழிகாட்டலில் இனிவரும் காலங்களில் பிரதேச ரீதியாக தலைமைத்துவத்தை ஏற்படுத்தி அவற்றின் மூலம் பிரதேச ரீதியான செயற்றிட்டங்கனை முன்னெடுத்து செல்ல உள்ளோம்.

எமது நாடு எமது மக்கள் சரியான தேர்வின் வழியில் செல்ல வேண்டும் உங்களுடைய தெரிவு பிழையாக இருந்தால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நடக்கும் பிரச்சினைகள்தான் எமது நாட்டிலும் நடக்கும் என்பதை மறந்து விடவேண்டாம். உங்களுடன் அங்கஜன் இராமநாதன் உள்ளார். உங்களை சிறப்பாக வழி நடத்தி செல்வார். இது முற்றிலும் தெரிந்த ஒரு விடயமாகும். ஏதிர்காலங்களில் சிறப்பான செயற்றிட்டங்கள் உங்களுடைய பிரதேசங்களில் இடம்பெற வேண்டும் அதற்கு எமது மாண்புமிகு ஜானதிபதி மகிந்த அவர்கள் மீண்டும் எமது நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் நிச்சயம் வருவார் அது யாவரும் அறிந்த உண்மை.

இந்நீலச் செயலணியின் செயற்பாடும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்ங்கள் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிடும் போது…

எமது பிரதேசத்தின் பெரும் மக்களாகிய நீங்கள் யோசிக்க வேண்டிய தருணங்கள் இவை. நாம் எமது பிரதேசத்தை வளம் படுத்த போகும் தருணங்கள் இவை. கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை மறந்து விட்டேமா? நாம் செய்த தெரிவகள் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தன.

கடந்த காலங்களில் சந்திரிக்க குமாரதுங்க அவர்களை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம் எமது பிரதேசத்தில் என்ன நடந்தது என்ன வளர்ச்சி நடந்தது அதன் பின் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தெரிவு செய்தோம் என்ன நடந்தது தமிழ் மக்களுக்கு? அதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பென்சேகாவை தெரிவு செய்தோம் தோல்வியில் முடிந்தது. இவ்வாறு நாங்கள் செய்த தெரிவுகள் எல்லாமே தோல்வியை தழுவிக் கொண்டது இவ்வளவு காலங்களில் ஒரு தடவையாவது மாண்புமிகு ஜனாதிபதியை தெரிவு செய்தோமா? இல்லை. ஆகவே இம்முறையாவது சரியான தெரிவை செய்வோம் மாண்புமிகு ஜானதிபதி மகிந்த ராஜ பக்சாவின் கரங்களை வலுப்படுத்துவோம். ஆனால் நாம் ஜனாதிபதி அவர்களுக்கு வாக்களிக்காத நிலையிலும் அவர் எமது பிரதேசத்தை மிகச்சிறந்த முறையில் வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார் தற்போதும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் எமது பிரதேசததை மட்டுமின்றி எமது நாட்டின் எல்லா பகுதிகளையும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்கின்றார்.

எமது பிரதேச அரசியல்வாதிகள் தமது சுயலாப அரசியலுக்காக எமது பிரதேச மக்களை பலிக்கடாவாக பயன்படுத்தி வருகின்றானர். இன்றும் வரப்போகும் தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவாக செயற்பட போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். இது மக்கள் மீது இவர்கள் கொண்ட அக்கறையின் வெளிப்படாக கருத முடியுமா? அல்லது கைகழுவும் செயற்படாக கருத முடியுமா?

தற்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்கட்சி மிகுந்த ஏமாற்று வேலைகளை புரிந்து வருகின்றது. தறபோது அக்கட்சியுடன் சுகாதரா அமைச்சராக இருந்த மைத்திரிசிறிபால இணைந்துள்ளார். இச்சுகாதரா அமைச்சரை எத்தனை பேருக்கு தெரியும். அதை விட தமிழருக்காக ஒருநாளாவது மைத்தரிசிறி பார பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருப்பரா?.

ஆனால் எமது மாண்புமிகு ஜனாதிபதி எமது தமிழருக்காக ஜக்கிய நாடுகள் சபையில் தனது தொழியை விடுத்து தமிழில் உரையாற்றிய ஒருவராவர். நூம் இனியும் சிந்தித்து செயற்பட வேணடும். இந்த நீலச்செயலணி எமது பிரதேசத்தை வளம் செய்ய அமைக்கும் ஒரு செயலாணியாகும் இது ஒரு தனிநல செயற்பாடு அல்ல. தற்போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இச் செயலணி சிறப்பாக செயற்பாட்டு வருகின்றது. அது எமது பிரதேசத்திற்கும் தேவையான ஒன்றாகும். எமது மாவட்டத்தில் எவ்வொரு பிரதேசத்திலும் அதாவது ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் ஒவ்வொரு பிரதிநிதியை தெரிவு செய்து அவர்கள் முலம் அப்பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகள முன்னெடுத்து செல்லவுள்ளோம். குறிப்பாக குழச்செயற்பாடு, சிரமதானம், விழிப்புணர்வு செயற்பாடு, அபிவிருத்தி செயற்பாடு போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுத்து செல்ல உள்ளோம்.

இது வெற்றியளிக்க உங்களது ஆதரவு முற்றிலும் அவசியமானதொன்றாகும். ஆதற்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்பகின்றேன் என்று குறிப்பிட்டார்

பொது மக்களால் வினாவப்பட்ட வினாக்கள்……

செல்வரஜீவன் மனிப்பாய்
எமது பிரதேசத்தில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக வேலையில்ல பிரச்சனை நிலவி வருகின்றது. இதை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அத்துடன் ஆயிரக்கணக்கான இவ் இளைஞர்களுக்கு அரசங்கத்தால் வேலைவாய்ப்பை வழங்க முடியுமா?

அங்கஜன் இராமநாதன்:- எமது பிரதேசத்தில் தற்போது அரசங்கத்தால் பெருமளவு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பல்வேறு தொழில் வாயப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆத்துடன் பல இளைஞர்கள் பல்வேறு வகையிலான வேலைவாய்ப்புக்களுக்கு உள்வாங்கபட்டுள்ளானர். இதை எமது மாண்புமிகு ஜனாதிபதி மிகுந் கவனத்தில் கொண்டுள்ளார். இனிவரும் காலங்களில் பல்வேறு கைத்தொழிற்பேட்டைகள் எமது பிரதேசத்ததில் உருவாக்கப்பட்டு அதன் முலம் பல்வேறு இளைஞர் யுவதிகள் வேலைவாயப்புக்களை பெற்றுக் கொள்வார்கள்.

ரஜீவன் எழுதுமட்டுவாள் – எமது பிரதேசத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பெருமளவு வெள்ள நீர் தேங்கி உள்ளது இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் கூட வெள்ள நீரினுடாகவெ செல்ல வேண்டி உள்ளது. அத்துடன் சில சிறுவர்களை துக்கியே செல்ல வேண்டிய சுழ்நிலை தயவு செய்து இதனை கவனத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அங்கஜன் இராமநாதன்:- இப்பிரச்சனைக்கான தீர்வை மிகவிரைவில் இன்றோ நாளையோ நேரில் வந்து பார்வையிட்டு தீர்த்து வைப்பேன் என்று கூறியதோடு தற்போது நாம்பிரதேசத்திற்கு கொண்டு வந்துள்ள இந்த நீலச் செயலணி முலம் இந் பிரச்சனைகள் இலகுவாக தீரத்து கொள்ள முடியும். இவ்வாறான பிரச்சனைகள் எமது யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் காணப்படுகின்றது. அவற்றை நாம் இவ் நீலச் செயலயணி முலம் இனிவரும் காலங்களில் இலகுவாக தீர்த்து வைப்போம் என்று கூறி முடித்தார்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந் நீலச்செயலணியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இனியும் பிரதேச ரீதியாக இந்நீலச் செயலணியின் பலரும் இணைந்து கொண்டு பல்வேறு செயற்றிட்டஙகளை மேற்கொள்ள ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 

 

d

g

h

m

 

 

v

 

Related Posts