“எமது பெண்கள் நாகரிக மோகத்தில் மூழ்கி எங்கள் கலாசாரத்தினை புறக்கணிக்கக்கூடாது” – இவ்வாறு யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் ஜெயதேவி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது-
பெண்களுக்கு தாய்மை எப்போதுமே முக்கியமானது. பெண்கள் கடமை, கட்டுப்பாடு, இறைபண்புகளை கடைப்பிடிப்பதுடன் தாய்மையினை மிக முக்கியமாக கருத வேண்டும்.
முன்னைய காலத்தில் பெண்கள் அடிமைகளாகவும், பொம்மைகளாக இருந்த நிலையினை விடுத்து காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில், இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பெண்கள் கலந்து கொள்வதினால் எமது கருமங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் வெளிகாட்டப்படுகின்றன. அதேவேளை, நவீனமய நாகரிகம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி எமது கலாசாரத்தினைப் புறக்கணிக்காது நாம் பயணிக்கும் திசை சரியாக இருக்க வேண்டும்- என்றார்.