Ad Widget

நட்புறவை வளர்த்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பஹ்ரெயின் இராச்சியத்திற்குச் சென்றுள்ள சனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் பஹ்ரெயின் பிரதமர் கலீபா பின் சல்மான் பின் ஹமாட் அல் கலீபா ((Prince Khalifa bin Salman bin Hamad Al Khalifa) இளவரசர் அவர்களும் இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று (29) பகல் ரிட்ஸ்-கால்ட்டன் ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அதன் பின்னர் பஹ்ரெயின் பிரதமர் சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு பகல்போசண விருந்தளித்தர்.

Bahrain’s Prime Minister

அண்மையில் இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்கள் காரணமாக இருதரப்பு உறவுகளில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. இற்றைக்கு 05 வருடங்களுக்கு முன்னர் சனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின்பேரில் பஹ்ரெயின் பிரதமர் இலங்கைக்கு விஜயம்செய்திருந்தார். அது 33 ஆண்டுகளின் பின்னர் பஹ்ரெயின் இராச்சியத்தின் உயா்மட்ட தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்செய்த முதல் சந்தர்ப்பமாகும். ராஜபக்ஷ அவர்களின் தற்போதைய விஜயம் இலங்கை சனாதிபதியொருவர் பஹ்ரெயினுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். 1992ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு நட்புறவு நிலவியது. சனாதிபதி அவர்களின் இவ் விஜயம் நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் உறுதியாக்குவதற்குப் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹ்ரெயின் அமைச்சர்கள் பலர் பிரதமருடன் பகல்போசண விருந்தில் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசியரியர் ஜி.எல்.பீரிஸ், கைத்தொழில், வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா,
தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் விரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் நவுசர்பவுசி, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பஹ்ரெயினுக்கான இலங்கைத் தூதுவர் அனுரஎம். ராஜகருணா ஆகியோரும் சனாதிபதியுடன் கலந்துகொண்டனர்.

Related Posts