Ad Widget

த.தே.கூ.பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே: மாவை எம்.பி

mavai mp inதமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது’ என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் வரவேற்கிறது’ வளைவு திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், ‘அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து விடுதலையை காண்பதற்கு போராட வேண்டுமென்றும், அதற்கு அனைவரும் ஒன்று இணைய வேண்டும்.

உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட முடியாத நிலையில், நாம் மனப்பூர்வமான இதய அஞ்சலியை செலுத்தினோம். அதற்கும் அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளது. ஆனால் அதை மீறி நாம் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டாம் நிகழ்வாக யாழ். வரவேற்கிறது வளைவினை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளோம்.

அத்துடன், அரசாங்கத்தின் ஆட்கள் பிரதேச சபைக்கு மிரட்ல்கள் விடுத்தாலும், அவற்றினை மீறி நாம் செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரமாக தமிழரசு கட்சி எப்போதும் இருக்குமென்றும்.

தமிழரசுக் கட்சியும், தழிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்ததுதான் அதை நாம் காப்பாற்றிக கொள்ள வேண்டும். ஜனநாயக விழுமியங்களை முடக்கும் முயற்சியில் அரசும் அரசின் ஆடுகளும் முயற்சிக்கின்றதாக அவற்றினை எதிர்த்து நாம் தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அதன் தலைநகரமாக நல்லூர் விளங்குகின்றது. நல்லூரின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைவின் மூலம் ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்துக்கான அழைப்பாகவே அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள டச்சுக் காலத்துக் கோட்டை அடிமைத் தனத்தின் அடையாளமாக அமைந்துள்ளதோடு நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை வீரத்தின் அடையாளத்தை எடுத்துக்காட்டி நிக்கின்றது’ என்றார்.

‘இன்று பிரதேச சபைகள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த சர்வதிகார அடக்குமுறைகளுக்கு மத்தியில் எமது பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு செயற்பட்டு வரும் தவிசாளர்கள் நாங்கள் தோற்றுப்போன சமுதாயம் இல்லை என்பதை எமது உறுப்பினர்கள் நிரூபித்து வருகின்றனர்’ என்றார்.

‘1970ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர முதல்வராக இருந்த நாகராசா என்பவரால் இந்த வளைவு அமைக்கப்பட்டு மீண்டும் தமிழரசுக்கட்சின் ஆட்சியின் உள்ள நல்லூர் பிரதேச சபையின் கீழ் இந்த வளைவு திறக்கப்பட்டுள்ளமையானது இங்குள்ள தமிழரசுக் கட்சியினர் ஆகிய எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது’ என்றார்.

‘தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக செயற்பட்டு வருகின்றது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts