Ad Widget

தேர்தலூடாக தென்னிலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்!! : ஜனநாயக போராளிகள் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) பகல் பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நீண்ட கால இடைவெளியின் பின்னர் தமிழர் தேசமான வட கிழக்கில் நடைபெற போகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் சவால் மிக்கதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தலில் எமது உரிமை சம்பந்தமாகவோ அல்லது கொள்கை சம்பந்தமாகவோ பேசவேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்த தேவை இன்று எமக்கு திணிக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அபிவிருத்தி சம்பந்தமாக கதைக்க வேண்டிய தருணத்தில் தமிழராகிய எம்மையெல்லாம் உரிமை, தேசியம் போன்றவற்றை பற்றி பேசுவதற்கு மாற்றியிருக்கின்றனர்.

தென்னிலங்கை கடும்போக்கு ஆட்சியாளர்களினால் சூழ்ச்சிகரமான அரசியல் காய்நகர்த்தல்கள் எம் மக்களிடையே துரோக குழுக்களினூடாக தள்ளிவிடப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts