Ad Widget

தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பம்

gov_logதேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பமாகின்றது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இம்முறை சுகாதார வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் சுகாதார சேவை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துவதே தேசிய சுகாதார வாரத்தின் பிரதான நோக்கங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் நாளை டெங்கு ஒழிப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

நாடாவிய ரீதியிலுள்ள வைத்தியாசலைகள், சுகாதார சேவை உத்தியோகத்தர் அலுவலங்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார அத்தியட்சகர் அலுவலங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு தேசிய சுகாதார வாரத்தை பிரகடனம் செய்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, எத்தனை சுகாதார வாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என சுகாதார சேவைகள் தொழில்சங்க ஒன்றியத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் அடங்கலாக 10 மாவட்டங்களிலுள்ள 30 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு காய்ச்சால் பீடிக்கப்பட்ட ஐயாயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது

Related Posts