Ad Widget

தாக்குதலுக்குள்ளான பல்கலை மாணவனை விடுவிக்க நடவடிக்கை: டக்ளஸ்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவரை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அம்மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

du3

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில், சனிக்கிழமையன்று (09) சுதர்சனின் பெற்றோருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, மேற்படி மாணவன் மீது குறித்த பல்கலைக்கழகத்தில் வைத்து இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்தியிருந்த விடயம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோரால் அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அம்மாணவன் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவித்து தரவேண்டுமெனவும் பெற்றோர்கள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய குறித்த மாணவனை உரியவர்களுடன் கலந்துரையாடி விடுவித்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரால் உறுயளிக்கப்பட்டது.

சந்திரகுமார் சுதர்சன் மீதான தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஏனைய மாணவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆகியோரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts