Ad Widget

தலையனைக்கடியில் திடீரென தீப்பிடித்த S4 கையடக்கத் தொலைபேசி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது சம்சுங் S4 கையடக்கத் தொலைபேசியை தனது தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த கையடக்கத் தொலைபேசி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

galaxy-s4-exploded-into-flames-under-sleeping-13-year-old-girls-pillow

இது குறித்து சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

தனது மகள் கையடக்கத் தொலைபேசியை தலையனைக்கு அடியில் வைத்தவாறே தூங்கியுள்ளார். இதனால் தொலைபேசியின் பெட்டரி சூடாகி நெருப்பு உண்டாகியுள்ளது. மகள் கருகும் வாசம் கண்டு சுதாரித்துக் கொண்டதால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தார் என்றார்.

குறித்த கையடக்கத் தொலைபேசியில் ஏற்கனவே பாவிக்கப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) பெட்டரி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சம்சுங் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன், அந்நிறுவனத்தின் சார்பில் வந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை சோதனையிட்டுள்ளனர். சோதனையில், பழைய பெட்டரி, சாச்ஜரில் சொருகப்பட்ட நிலையில் சூடாகியதால், உப்பி தீ ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்சுங் நிறுவனம், சிறுமிக்கு புதிய கையடக்கத் தொலைபேசியை மாற்றித் தருவதுடன், விபத்தில் கருகிய போர்வை மற்றும், மெத்தைகளையும் புதியதாக வாங்கி தர ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தும் முன் பயணர் கையேடுகளை படிக்குமாறும் அறிவுத்தியுள்ளது.

பயணர் கையேட்டில் தொலைபேசிகளை, காற்றோட்டமான இடங்களில் மாத்திரமே வைக்க வேண்டும் மற்றும் மெத்தைகள் துணிகள் போன்றவற்றால் தொலைபேசிகளை சுற்றுவது கூடாது என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts