Ad Widget

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியராக சந்தர்ப்பம் – ஜனாதிபதி

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தினார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளின் கணினி தேவைகளையும் ஆராய்ந்து பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

மேலும் நாடு முழுவதும் கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை கூறிய ஜனாதிபதி இனிமேல், அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கோகாலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ மற்றும் ஏனைய ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பவும் இப்பகுதியிலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

Related Posts