Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்: தேர்தல்கள் அலுவலகம்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கானது கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக அமைவதற்கு வாய்ப்பு இருப்பதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே தேர்தல் காலத்தில் குறித்த கருத்தரங்கானது அரசியல் சலப்பற்றதாக நடத்தப்படுவதனை உறுதிப்படுத்துவது அவசியம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணைக்குழு, தமிழ் மக்கள் பேரவையின் செயலாளர் மற்றும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts