இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர் லிமிடெட்டின் புதிய வெளியீடாக ‘தமிழ்மிரர்’ பத்திரிகை இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் தமிழ்மிரர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முன்னணி ஆங்கில நாளிதழான டெய்லிமிரர் பத்திரிகையின் இலவச இணைப்பாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தமிழ்மிரர் பத்திரிகையை தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்மிரர் இணையத்தளத்துடன் கடந்த நான்கு வருடங்களாக இணைந்திருக்கும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கமைய இன்றைய இந்த புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
எம்மோடு இணைந்திருக்கும் வாசகர் அனைவருக்கும் தமிழ்மிரர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.