Ad Widget

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே தற்போது வெளிநாடுகளில் கூலிப்படை: சவேந்திர சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப் படைகளாக இணைந்து செயற்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், இந்தப் போரில் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம், குடியுரிமை, உள்ளிட்ட போலி வாக்குறுதிகளால் அழைத்துச் செல்லப்படுகின்ற வீரர்கள், அங்கு கூலிப்படையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் எமது தேசத்தின் பெருமையாக இருந்த இந்த படைவீரர்கள் இன்று போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணிந்து போர் வீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் என்று வரையறுக்கும் விழுமியங்களையும் கைவிட்டுள்ளனர்.

கடமை, மரியாதை மற்றும் தாய்நாட்டிற்கான விசுவாச உணர்வு ஆகியவற்றால் இராணுவ வீரர்கள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும்.

எனினும் இன்று பணம் மற்றும் நிலையற்ற பெருமைக்காக தங்களின் விசுவாசத்தை கைவிடும்படி தூண்டப்பட்டுள்ளது.

கூலிப்படை என்பது உன்னதமான போர் நடவடிக்கை அல்ல. இது ஓர் ஆபத்தான பாதையாகும்” என சவேந்திர சில்வா அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

???????????? ???????????? ?????? ?????????????: ????? ??????????? ???????!!

Related Posts