Ad Widget

தன்ஸானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் திரு பேர்னாட் ஏ மெம்பே (Bernard K. Membe) நேற்று மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

membe_0

ஆரம்பமாக 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு (CHOGM) தனது வாழ்த்துக்களை தெரிவித்த திரு. மெம்பே இலங்கைக்கான விஜயத்தின்போது தன்ஸானிய பிரதிநிதிகளின் நினைவுகளை ஜனாதிபதியிடம் மீட்டிக்கொண்டார்.

2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றியமைக்காவும் சர்வதேச மன்றங்களில் தன்சானியா இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிளுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு தாம் விஜயம் செய்தபோது கண்டவைகள் ஊடகங்களில் குறிப்பிடப்படுபவைக்கு முற்றிலும் மாற்றமானவையாக இருந்ததாகவும் கடந்த எட்டு மாதங்களின் பின்னரும் கூட தாம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மெம்பே மேலும் தெரிவித்தார்.

போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இரண்டு நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியும் திரு. மெம்பேயும் கலந்துரையாடினர்.

போருக்குப் பிந்திய பிரச்சினைகளைக் கையாள்வதில் பல ஆபிரிக்க நாடுகள் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக
திரு மெம்பே தெரிவித்தார்.

நீங்கள் மனிதாபிமானம், சமாதானம், ஸ்திரத்தனமை மற்றும் பொருளாதாரத்துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளீர்கள் என போருக்குப் பிந்திய இலங்கையின் அனுபவங்கள் குறித்து திரு. மெம்பே தெரிவித்தார்.

தன்ஸானியா ஜனாதிபதி ஜக்காயா கிக்வீட்டின் வாழ்த்துக்களை ஜனாதிபதியிடம் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மெம்பே இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்து தன்சானியா மிகவும் திருப்தியடைந்துள்ளது என்றும் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்த தமது நாடு எதிர்பார்த்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தன்சானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சைச் சேர்ந்த பல உயர்மட்ட அதிகாரிகளும் திரு. மெம்பேயுடன் பிரசன்னமாயிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
திருமதி ஷெனுக்கா செனவிரத்ன உகண்டாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் திரு. வீகனாந்தன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

Related Posts